முத்துப்பேட்டை, அக். 17: முத்துப்பேட்டை அருகே அரசுப்பள்ளியில் கஜாபுயலில் வீழ்ந்த மரங்களை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் இதனை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் இப்பகுதி மக்கள் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். அதேபோன்று இப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரங்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி முன்னிலை வகித்தனர். இதில் தலைவர் சாகுல் ஹமீது மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் பல்வேறுரக மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் செயலாளர் பத்மநாபன், திமுக நிர்வாகி சப்வான் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் கஜாபுயலில் வீழ்ந்த மரங்களை மீட்க மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.