முத்துப்பேட்டை, அக். 2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேட்டை 16,17,18 ஆகிய வார்டுகளின் 24-வது கிளை மாநாடு நேற்று நடைபெற்றது. வார்டு தலைவர் ஏசுராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் அருணாச்சலம் கட்சிக்கொடி ஏற்றினார்.. பின்னர் கம்யூனிஸ்ட் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகரச்செயலாளர் செல்லத்துரை பேசினர்.
நிறைவேற்றப்பட தீர்மானங்கள்: நூறுநாள் வேலை திட்டத்தை பேரூராட்சி உட்பட நகர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், பேட்டைப்பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள செய்து தரவேண்டும், பேட்டை தாமரைக்குளத்தில் குப்பைகள் கழிவுகள் விழாமல் இருக்க 3 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு குடியிருப்பு மனைப்பட்டா வழங்க வேண்டும், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்களுடன் 24 மணி நேரமும் மருத்துவ வசதி செய்து தரவேண்டும், முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும், பேட்டை காளியம்மன் கோயில் தெருவில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும், காளியம்மன் கோயில் அருகில் உள்ள வாய்க்காலில் பெண்கள் குளிக்க படித்துறை கட்டித்தரவேண்டும், தொப்பைத்தான்வெளி காளியம்மன் கோயில் தெரு வாய்க்காலில் மண் சரியாமல் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஜெயராமன், சரவணன், மணிகண்டன், மந்திரமூர்த்தி, சங்கர், செல்வராஜ், அருள் மணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.