கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த முத்தரப்பு மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை, தென் ஆப்ரிக்கா அணி, 76 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இலங்கை தலைநகர் கொழும்புவில், இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது.
அந்த அணியின் ஆனரி டெர்க்சென் 84 பந்துகளில் 104 ரன், க்ளோ டிரையன் 51 பந்துகளில் 74 ரன் குவித்தனர். பின்னர், 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. துவக்கம் முதல் மந்தமாக ஆடிய இலங்கை வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி, 239 ரன் மட்டுமே எடுத்தது. தென் ஆப்ரிக்காவின் ட்ரையன் 5 விக்கெட் வீழ்த்தினார். அதனால், 76 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. க்ளோ டிரையன் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா ரன் வேட்டை இலங்கை விட்டது கோட்டை appeared first on Dinakaran.