கொழும்பு: இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்கிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் இன்று மோத இருக்கின்றன. இன்று முதல் மே 9ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் தலா 2 முறை மோதும். அதில் அதிக வெற்றிகள் பெறும் இரு அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் மே 11ம் தேதி நடக்கும். இறுதி ஆட்டம் மட்டுமின்றி லீக் ஆட்டங்களும் கொழும்பில் மட்டுமே நடக்கும். ஆட்டங்கள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கும். இப்போட்டியில் பங்கேற்க ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி கொழும்பு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் இன்று மோத இருக்கின்றன.
The post முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட்; முதல் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை மோதல் appeared first on Dinakaran.