முத்தரப்பு டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

5 hours ago 2

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, வான்டெர் டஸன் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடன்ட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென்(கேப்டன்), டெவால்ட் பிரெவிஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், அண்டில் சிமெலேன், நகாபயோம்சி பீட்டர், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்

Read Entire Article