முதியவரை தாக்கி சங்கிலி பறிப்பு

3 months ago 21

தர்மபுரி, அக்.8: தர்மபுரி மாவட்டம், அரூர் ஒடசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்(65). இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2வது மகள் சாமந்தி, அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், மகள் கட்டி வரும் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுந்தரம் படுத்திருந்தார். அப்போது, டூவீலரில் அந்த வீட்டுக்கு ஒருவர் வந்துள்ளார். சுந்தரம் தனது மருமகன் வந்துள்ளதாக நினைத்து வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அப்போது, திடீரென அந்த நபர் கற்களை கொண்டு சுந்தரத்தை சரமாரியாக தாக்கினர். பின்னர், அவர் அணிந்திருந்த 4பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து டூவீலரில் மின்னல் வேகத்தில் தப்பினார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், சுந்தரத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றிய புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

The post முதியவரை தாக்கி சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article