முதல்வர் ஸ்டாலின் ஊட்டி வருகை மேடை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

3 days ago 4

 

ஊட்டி,மார்ச்29: தமிழக முதல்வர் கலந்துக் கொள்ளும் விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஊட்டி வருகிறார். தொடர்ந்து, 6ம் தேதி ஊட்டி அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.நீலகிரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் மேடை, அரங்க பணிகளையும், நகராட்சித்துறையின் சார்பில் விழா நடைபெறும் இடத்தில், பொதுமக்கள் மற்றும் பயனாளிகளுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகளையும், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் அமரும் இடங்களையும், காவல்துறையின் சார்பில், பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன நிறுத்திமிடம், உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு, நகராட்சிப் பொறியாளர் சேகரன், ஊட்டி தாசில்தார் சங்கர்கணேஷ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் ஸ்டாலின் ஊட்டி வருகை மேடை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article