‘முதல்வர் ஸ்டாலினின் மக்கள் நல செயல்களுக்கு நாங்கள் துணை நிற்போம், ஆனால்...’ - தமிழக பாஜக

2 months ago 13

சென்னை: “மக்கள் நல களப்பணி” என்ற பெயரால் முதல்வர் ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை ஏமாற்றாமல், மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் வகையில் சமூக அக்கறையுடன், செயல்பட வேண்டும். அதே சமயம் இது தேர்தலுக்காக நடத்தப்படும் கள ஆய்வா, உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடத்தப்படும் கள ஆய்வா என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும்" என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, தமிழக முதல்வர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று, மாவட்டம் தோறும் நடக்கும் மக்கள் நல திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய, களப்பணிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான, கள ஆய்வை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை பாஜக வரவேற்கிறது.

Read Entire Article