சென்னை: தமிழகத்தில் அதிக மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, சோழிங்கநல்லூர் கண்ணகிநகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றிருக்கிறது. இதனுடைய நகர்வு தமிழ்நாட்டை நோக்கி வரும் என்று சொல்லி உள்ளார்கள்.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்க்கிறோமா? என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எதிர்பார்க்கிறோம் என்பது வேறு. ஆனால், எல்லாவற்றுக்கும் அரசு தயாராக இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மண்டலம் வாரியாக தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழகத்திற்கான நிதி மற்றும் உதவிகள் கிடைப்பது குறித்து எம்பிக்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?
ஏற்கனவே தமிழக எம்பிக்களை அழைத்து என்னென்ன பேசினோம். அந்த கூட்டத்தில் எடுத்த முடிவு குறித்து தீர்மானமாக கொடுத்திருக்கிறோம். அதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பேசுவார்கள். அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டில் வந்து சந்தித்துள்ளதாக டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறாரே? ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினசரி ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தமிழ்நாட்டில் அதிக மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது appeared first on Dinakaran.