முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால அவகாசம்

2 months ago 11

 

கோவை, டிச. 6: தமிழ்நாட்டில் பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழாவில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள பி.பார்ம் மற்றும் டி பார்ம் சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விண்ணப்பதாரர்கள் நலன் கருதி வரும் வருகின்ற 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கால அவகாசம் appeared first on Dinakaran.

Read Entire Article