சென்னை: முதல்வர் மருந்தகம் திறப்பு விழா தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், ‘‘முதல்வர் மருந்தகம்” திறப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், கூடுதல் பதிவாளர் (நுகர்வு பணிகள்) அம்ரித் உட்பட இணைப்பதிவாளர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் மருந்தகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்துவார். ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் வரும் 24ம் தேதி திறக்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பி்டத்தக்கது.
The post முதல்வர் மருந்தகம் திறப்பு விழா: அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.