சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், துறைமுகம் மேற்கு பகுதியில் வரும் மார்ச் மாதத்தில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இணையர்களுக்கு அரை பவுன் தங்க தாலி மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
இந்நிகழ்வின் மூலமாக, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இணையர்கள், தங்களின் வயது மற்றும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை போன்ற இருப்பிட ஆவணங்களுடன் துறைமுகம் சட்டமன்ற அலுவலகம், 22, வடக்கு கோட்ட சாலை (ராஜா அண்ணாமலை மன்றம் எதிரில், பழைய திருவள்ளுவர் பேருந்து நிறுத்தம் அருகில்) என்ற முகவரியில் அணுகி, தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இதுபற்றிய விவரங்களை 9840115857, 7299264999, 9094480356, 9551640914 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.
The post முதல்வர் பிறந்த நாளில் திருமணம் செய்ய பதிவு செய்யலாம் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.