சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.