முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து உடைப்பு, போலீஸுடன் தள்ளுமுள்ளு - பாமகவினர் கைது

3 months ago 12

கடலூர்: சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (நவ.26) காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி,பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர். போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறினர்.

Read Entire Article