முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு திருக்கழுக்குன்றம் திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி

4 hours ago 2

திருக்கழுக்குன்றம்: தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த திருக்கழுக்குன்றம் திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்தை பேரூர் திமுக செயலாளர் ஜி.டி.யுவராஜ் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொத்திமங்கலம் புறவழிச்சாலை பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்று, இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களிடம், மனுக்களை பெற்றார்.

முதல்வரின் ‘‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான ஜி.டி.யுவராஜ் ஏற்பாட்டில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் அதிகளவில் கட்சியினரை அழைத்து வந்து, முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் வரவேற்பை கண்டு பூரிப்படைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

இதையடுத்து, முதல்வரின் வருகையையொட்டி இரவும், பகலும் பாடுபட்ட நிர்வாகிகளை பாராட்டும் வகையில், திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்த பேரூர் கழக பொது உறுப்பினர்கள் கூட்டத்தின்போது பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ், முதல்வர் வருகை நிகழ்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, பாராட்டினார். பின்னர், அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் அருள்மணி, பேரூர் துணை செயலாளர்கள் இளங்கோ, சரவணன், தௌலத்பீ, மாவட்ட பிரதிநிதிகள் செங்குட்டுவன், வேதகிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு திருக்கழுக்குன்றம் திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி appeared first on Dinakaran.

Read Entire Article