சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,525 க்கும் சவரன் ரூ.60,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி கு.104-க்கு-விற்பனை ஆகிறது. இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,435 ரூபாய்க்கும்; சவரன் 59,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி திங்கள் கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 59,600 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஜன.,21) தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.7,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்துள்ளது.
The post முதல்முறையாக ரூ.60 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.