“2026-க்குப் பிறகு திராவிடம் துடைத்து தூர வீசப்படும்” - சீமான் ஆவேசம்

2 hours ago 1

சென்னை: “தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026-க்குப் பிறகு, திராவிடம் துடைத்து தூரவீசப்படும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து, சென்னை நீலாங்கரைப் பகுதியில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தை பெரியாரிய ஆதரவு இயக்கங்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று (ஜன.22) ஈடுபட்டனர். இதனிடையே சீமான் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். முற்றுகைப் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுதைத் தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read Entire Article