சென்னை: முதல் முறையாக வீட்டிலிருந்து வெளியே வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் நடிகர் விஜய். அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வழக்கமாக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை செலுத்தி வந்த விஜய் முதன்முறையாக வெளியில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கியதும் நேராக சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரது வருகை குறித்து மீடியாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
The post முதல் முறையாக வெளியே வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் நடிகர் விஜய் appeared first on Dinakaran.