
மும்பை,
மும்பை அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அஷ்வனி குமார், கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல்.-ல் அறிமுகம் ஆனார். அவர் தனது முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். ஐ.பி.எல்.-ல் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 15-வது பவுலர் ஆவார்.
பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான அஷ்வனி குமாரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 4 விக்கெட்டுகளை அள்ளிய அஷ்வனி குமார், ஐ.பி.எல்.-ல் அறிமுக ஆட்டத்திலேயே 4 மற்றும் அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 6-வது பவுலர், முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.