முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

5 hours ago 1

பார்படாஸ்,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கடந்த 25ம் தேதி பார்படாசில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சிலில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 310 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ண்யிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 159 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது. 

Read Entire Article