முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

16 hours ago 2

புலவாயோ,

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி புலவாயோவில் நாளை தொடங்க உள்ளது.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டனான டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக கேஷவ் மகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் செயல்பட உள்ளார். இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது . 

Read Entire Article