முதல் டெஸ்ட்; இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

2 weeks ago 7

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட ஜூனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சீனியர் வீரர்களான விராட், ரோகித், அஸ்வின் இல்லாமல் களம் காணும் இந்திய அணி இந்த தொடரை வெல்ல கடுமையாக போராடும்.

இந்நிலையில், இந்த தொடர் குறித்தும், இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் குறித்தும், அணியின் பிளேயிங் லெவன்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்சனை, அவர் தேர்வு செய்யவில்லை. தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. 

Read Entire Article