முதல் டி20 போட்டி; இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

3 hours ago 1

கொல்கத்தா,

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையாக போராடும்.

அதேவேளையில் அதிரடி வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க அனைத்து வகையிலும் போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article