
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்ககள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.