முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் 'டப்பிங்' தேவை: அண்ணாமலை விமர்சனம்

3 months ago 10

கோவை,

கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி இரண்டரை மடங்கு உயர்ந்திருக்கிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு கொடுத்த நிதி குறித்து அவர்களுடைய நிதி அமைச்சரிடம் கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?. காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது? பா.ஜனதா ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பா.ஜனதா தயாராக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 7 சதவீதம் ஓட்டுகளை தி.மு.க. இழந்து இருக்கிறது. 2026-ல் 20 சதவீத வாக்குகளை இழந்து கீழே வருவார்கள். முதல்-அமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள் அதுவும் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

35 அமைச்சர்களில் 13 பேர் அ.தி.மு.கவில் இருந்து வந்தவர்கள். அதனால் டப்பிங் எங்களுக்கு தேவைப்படவில்லை அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.கவிற்கு வந்தவர்கள் தான் முதல்-அமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவது இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Read Entire Article