
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த சூழலில் இன்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வில்லை.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தயாளு அம்மாள் வீட்டில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.