முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி

2 hours ago 3

சென்னை,

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்டதையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

'துணை முதல்-அமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதல்-அமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.

அன்பும், நன்றியும்!

இவ்வாறு அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 


நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல,… pic.twitter.com/x7InLzXoNc

— Udhay (@Udhaystalin) September 28, 2024


Read Entire Article