முதலூரில் பழுதான அடிபம்பை சீரமைக்க கோரிக்கை

8 hours ago 2

சாத்தான்குளம், ஜன. 10: சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் தர்மாபுரி பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையோரத்தில் அடிபம்பு அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவசர தேவைக்கு தண்ணீர் எடுத்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்த அடிபம்பு பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டும் பழுது பார்க்கப்படாமல் உள்ளது. இதனருகில் சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் வழங்கப்பட்டது. அதுவும் பழுதாகி போனதால் அந்த தொட்டியும் அகற்றப்பட்டு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், பழுதான அடிபம்பை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post முதலூரில் பழுதான அடிபம்பை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article