முதலிடம் நோக்கி பஞ்சாப் முடிந்த சோகத்தில் டெல்லி

1 day ago 3

* ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
* இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
* பஞ்சாப் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளுடன், 17 புள்ளி பெற்று பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப், ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
* டெல்லி அணி, 13 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன், 13 புள்ளி பெற்று, பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. இந்த அணி, பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது.
* பஞ்சாப் அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், ஒன்றில் தோல்வி, ஒன்றில் டை, 3ல் வெற்றி பெற்றுள்ளது.
* டெல்லி அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், 4ல் தோல்வி, ஒன்றில் டை கண்டுள்ளது.
* பஞ்சாப் – டெல்லி அணிகள் இதுவரை, 34 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில், டெல்லி 16, பஞ்சாப் 17 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
* இப்போட்டிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் 202 ரன்களையும், டெல்லி 231 ரன்களையும் குவித்துள்ளன.
* இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன. ஒரு போட்டி டை ஆனது.
* இன்றைய போட்டியில் பஞ்சாப் வென்றால், புள்ளிப் பட்டியலில் மேலே செல்லும். மாறாக, டெல்லி வென்றால் பஞ்சாப் அணியின் ரன் ரேட் விகிதம் சற்று குறையும்.

The post முதலிடம் நோக்கி பஞ்சாப் முடிந்த சோகத்தில் டெல்லி appeared first on Dinakaran.

Read Entire Article