சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கலாக உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும். அதன்படி, இந்த 2025-2026ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும். குறிப்பாக, 2026ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுதவிர, தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்கள் ஆகியவற்றிற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதனால் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. appeared first on Dinakaran.