முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு..!!

1 month ago 9

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி அடிப்படையில் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் கைவினைத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத்திட்டத்தில் அதிகபட்சமாக 25% மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். ரூ.3 லட்சம் வரை கடனுதவி திட்டத்தில் 5% வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கலைஞர் கைவினைஞர் திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள், தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் பயன்பெறலாம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article