பெரம்பலூர்,நவ.29: பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாது காப்புத்திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் முதிர்வு தொகைபெற விண்ணப் பிக்கலாம் என்று மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாது காப்புத்திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கும் பொருட்டு,
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்களது வைப்புத்தொகை பத்திரம், பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு சான்றிதழ், மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய சான்றுகளை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில், பெரம்பலூல் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வழங்கி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த பயனாளிகள் முதிர்வு தொகை பெறலாம்: விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.