நாமக்கல், ஜன.17: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக 480 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில், முட்டையின் விலை குறைந்து வருவதால் அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும், முட்டை விலை குறைக்கப்பட்டது. மேலும், என்இசிசி நிர்ணயம் செய்யும் விலைக்கே அனைத்து கோழிப்பண்ணையாளர்களும், முட்டையை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
The post முட்டை விலை 460 காசானது appeared first on Dinakaran.