சென்னை: முக்கிய வழித்தடங்களில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு, ரயில் வேகம் அதிகரிக்கப்படுவதால், சென்னை - பாலக்காடு விரைவு ரயில் உள்பட 4 ரயில்களின் நேரம் ஜூலை 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதுதவிர, முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ரயில்களின் பயண நேரம் குறைகிறது.