ஆலந்தூர், மே 14: திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் இந்தியாவிலேயே 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு, என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக ‘‘நாடு போற்றும் 4 ஆண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’’ என்ற தலைப்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகே நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, ஆலந்தூர் மண்டல குழு தலைவரும் பகுதி செயலாளருமான என்.சந்திரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சுந்தர்ராஜன், தலைமைபொதுக்குழு உறுப்பினர்கள் எம்எஸ்கே இப்ராகிம், இரா.பாஸ்கர், கவுன்சிலர் தேவி யேசுதாஸ், பகுதி துணை செயலாளர் ராஜேஸ்வரி சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் ஏசுதாஸ் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 500 பெண்களுக்கு தோசைகடாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், இந்தியாவிலேயே 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான், தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் ரூ.600 கோடி செலவில் மிக சிறப்பாக செயல்படுத்தும் ஆட்சி திமுக ஆட்சி. நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு சுமார் 53 பேர் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக பதிவி பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடுகளுக்கே சென்று மாதந்தோரும் மருந்து மாத்திரைகள் தரும் ஆட்சி தான் திமுக ஆட்சி.
இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் இல்லை. இதற்கு ஐ.நா சபையே தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கியுள்ளது. நம்மை காக்கும் 48 திட்டம் மூலமாக லட்சக்கணக்கான உயிர்களை திமுக அரசு பாதுகாத்துள்ளது. அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் 2 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கினர். ஆனால், திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் 2 லட்சத்து 11 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம் என பெருமிதத்துடன் கூறினார்.
இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சென்னை அரங்கநாதன், ரிஷி சந்தோஷ், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், பகுதி நிர்வாகிகள் ஏ.சாலமோன், ர.பாபு, இ.ரமேஷ் கவுன்சிலர்கள் அமுதபிரியா, பூங்கொடி, அணிகளின் சார்பாக கேபிள் ராஜா, மீன் மோகன், பிரான்சிஸ், எஸ்.காஜா மொய்தீன், வட்ட செயலாளர்கள், ஜெ.நடராஜன், இ.உலகநாதன், ஏ.ஆர்.சரவணா, கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஏ.வேலவன், கே.பி.முரளி கிருஷ்ணன், எம்.ஆர்.சீனிவாசன், கே.செல்வேந்திரன், டி.ரவி கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி விக்கி, விஜய்பாபு, சந்திரசேகர், சீனிவாசன், சதீஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம் appeared first on Dinakaran.