முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல்!

3 weeks ago 6

சென்னை: அன்புமணி பகிரங்க எதிர்ப்பு தெரிவித்ததால் பேரன் முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி எதிர்ப்பை மீறி கட்சிப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று முகுந்தன் தனது தாத்தா ராமதாஸிடம் நேற்றிரவு கூறியுள்ளார். பா.ம.க.வில் தற்போது வகிக்கும் ஊடகப் பிரிவு பொறுப்பில் இருந்தும் விலகி தொண்டராக மட்டும் தொடர முகுந்தன் விருப்பம் கூறியுள்ளார்.

முகுந்தன் விருப்பத்தை தாத்தா ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாக அன்புமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகுந்தனுக்கு பதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்படுவது உறுதியான பிறகே தந்தை ராமதாஸை சந்திக்க அன்புமணி புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ், அன்புமணி இடையே நடைபெறும் சந்திப்புக்கு பின்னர் முகுந்தன் பதவி குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனது மகள் வழி பேரனான முகுந்தனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பை வழங்குவதாக பொதுக்குழுவில் நேற்று ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸ் அறிவிப்புக்கு மேடையிலேயே பகிரங்கமாக அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். முகுந்தனுக்கு பதவி தருவதில் உறுதிகாட்டிய ராமதாஸ், முடிவை ஏற்காவிட்டால் கட்சியில் இருந்து விலகலாம் என அன்புமணியை எச்சரித்தார். நேற்று நடந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உறுப்பினர் என்பதை தவிர பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் முகுந்தன் விலகினார்.

 

The post முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article