மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு ‘கலைத்துறை வித்தகர் விருது’ - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

3 months ago 22

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.4) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை கவிஞர் மு. மேத்தா-வுக்கும், பின்னணிப் பாடகி பி. சுசிலா-வுக்கும் வழங்கி சிறப்பித்தார்.

Read Entire Article