ஜெயங்கொண்டம் அக்.22: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி யில் பவர்கிரிட் கார்ப்பவரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வை யொட்டி பள்ளி மாணவர்களுக் கிடையே ஓவிய போட்டி நடைபெற்றது. சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாகுடி பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் அரசு பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணைய ஆலோசனையின் படி ஊழல் விழிப்பு விழிப்புணர்வு குறித்து மக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்மீன்சுருட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர் களிடையே இந்தியா என்கிற தலைப்பால் ஓவிய போட்டி நடைபெற்றது.
இங்கிகமுக்கியல் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமி டெட் பாப்பாக்குடி நிறுவன தலைமை மேலாளர் விஸ்வநாதன், சுரேஷ்பாபு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் மீன் சுரு ட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், புண்ணியகோடி ஆகியோர் பங்கேற்றனர்.
நிறுவன மேலாளர் வில்வநாதன் தலைமை ஆசிரியர் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர், ஊழலை ஒழிக்க வோண்டும் நாட்டின் வளர்ச்சிக்கான பண்பாடு மற்றும் கலாசாரத்தை பேணி காக்க ஊழலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
The post மீன்சுருட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு, உறுதியேற்பு appeared first on Dinakaran.