நன்றி குங்குமம் தோழி
*உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். அதில் மிகச் சிறந்தது மீன் புரதம். மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது.
*மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.8மீன் உண்ணும் பழக்கம் ரத்த உறைவைக் குறைப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
*மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
*மத்தி மீனில் கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புகள் வலுவடையும். மூட்டு வலி பிரச்னைகள் வருவதில்லை.
*விரால் மீனில் அல்புமின் சத்து இருக்கிறது. இது காயங்கள் வேகமாக ஆற பெரிதும் உதவுகிறது. விரால் மீன் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
*தி லோப்பியா மீனில் உள்ள செலினியம் என்ற சத்து புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது.8பால் சுறா மற்றும் திருக்கை மீன்கள் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது.
*சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்துக் கழலை நோயைத் தடுக்கிறது.
*கௌத்தி மீனில் உள்ள துத்தநாகச் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*கெண்டை மீனில் உள்ள பொட்டாசியம் தசையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
*ஆரா மீன்களில் உள்ள ஒமேகா 3 அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி நரம்புகளுக்கு பலம் தருகிறது.
*காணாங்கெளுத்தி போன்ற மீன்களில் இருக்கும் ஒமேகா-3 உடலில் உள்ள ரத்தத்தை உறையாமல் பார்த்துக் கொள்கிறது.
*வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன் சைனஸ் பாதிப்பு குறையும்.
*நெத்திலி மீனில் வைட்டமின் – ஏ சத்து அதிகம். இதை வாரம் ஒரு முறை உட்கொண்டு வந்தால் கண் பிரச்னைகளை தடுக்கலாம்.
*வாவல் மீனில் புரதச்சத்து அதிகம் என்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
The post மீன் வகைகளும் சத்துக்களும்! appeared first on Dinakaran.