மீனவர்களுக்காக ரூ.576 கோடியில் திட்டங்கள்: 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

4 weeks ago 9

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரூ.576 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். மீனவர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை திருப்பி தரவேண்டும்’ என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின்போது இதுகுறித்து அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தோம். அதை பிரதமருக்கும் உடனே அனுப்பி வைத்தோம்.

Read Entire Article