மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

14 hours ago 1

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூர் மற்றும் வெள்ளப்பள்ளம் ஆகிய 3 பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். மீனவர்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்தும், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்களை தடுக்கவும் பலமுறை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நம் நாட்டில் உள்ள மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு மத்திய அரசு பார்க்கவேண்டும். கடந்த மாதம் பிரதமர் மோடி இலங்கை சென்றபோது மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இருநாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்யவேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article