மீண்டும் ரீரிலீசாகும் 'இன்டர்ஸ்டெல்லர்' - உற்சாகத்தில் ரசிகர்கள்

8 hours ago 2

சென்னை,

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படம் 'இன்டர்ஸ்டெல்லார்'.

இப்படம் கடந்த பிப். 7-பிப். 14 வரை இந்தியாவில் ஐமேக்ஸ் திரைகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை பல ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதில் இன்டர்ஸ்டெல்லர் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது.

இந்த நிலையில், மீண்டும் 'இன்டர்ஸ்டெல்லர்'திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளது. அதன்படி, வருகிற 14 முதல் 21 வரை மீண்டும் இந்திய ஐமேக்ஸ் திரைகளில் ரீ-ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

கடந்தமுறை பார்ப்பதற்கான வாய்ப்பும் டிக்கெட்டும் கிடைக்காத ரசிகர்கள் இந்த முறை தவறவிடக்கூடாது என உற்சாகமடைந்துள்ளனர். 'டூன் 2' படமும் அதேநாளில் ரீ-ரிலீசாகிறது.

Read Entire Article