மீண்டும் மீண்டும் துரோகம் இழைப்பதால் பிரதமர் மோடி அரசிடம் நியாயம் கேட்கிறார்கள் விவசாயிகள்: கார்கே விமர்சனம்

2 months ago 10

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் டெல்லி வாசலில் நீதி கேட்டு வரவேண்டும்? நீங்கள் அரியானா மற்றும் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகளின் போராட்டத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களது அரசானது மீண்டும் மீண்டும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதால் விவசாயிகள் நீதி கேட்டு வருகிறார்கள். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக்கூடாது என்ற துரோகம், சுவாமிநாதன் அறிக்கையின்படி உள்ளீட்டு செலவு மற்றும் 50 சதவீத குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தாத துரோகம், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்கவதற்கு ஒரு குழுவை அமைத்தாலும் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காத துரோகம். விவசாயிகளின் பாதையில் முள்வேலி வலையை விரித்து மீண்டும் டெல்லி என்லையை கன்டோன்மென்டாக மாற்றி அவர்களின் அமைதி பயணத்தை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுக்க முயற்சித்துள்ளீர்கள். நாடாளுமன்றத்தில் விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில்கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மீண்டும் மீண்டும் துரோகம் இழைப்பதால் பிரதமர் மோடி அரசிடம் நியாயம் கேட்கிறார்கள் விவசாயிகள்: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article