சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கடந்த 22ம்தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்த விலை உயர்வு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்கத்தின் விலை 2 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் புதன்கிழமையான நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தற்போது 61,000 ரூபாயை நெருங்கி, மீண்டும் புதிய உச்சத்தை அடைந்ததால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
The post மீண்டும் புதிய உச்சத்தை எட்டும் தங்கம் ரூ.61,000ஐ நெருங்குகிறது பவுன் விலை: மக்கள் கலக்கம் appeared first on Dinakaran.