மீண்டும் காயமடைந்த ஆர்ச்சர்... வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து விலகல்

4 hours ago 3

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி மே 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஹாரி புரூக் தலைமையிலான அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆர்ச்சர், ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஆர்ச்சருக்கு ஐ.பி.எல். தொடரின்போது வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக லுக் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ஏற்கனவே சர்வதேச போட்டிகளை பெருமளவில் தவறவிட்டுள்ள அவர் மீண்டும் காயமடைந்தது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 

Read Entire Article