மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் மிஷ்கின் !

3 months ago 27

சென்னை,

இயக்குனர் மிஷ்கின் "சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன்" போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 'நத்தலால' என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

இவர் உதயநிதி ஸ்டாலினி வைத்து 'சைக்கோ' படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் பிசாசு 2 படத்தை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'டிரெய்ன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சமீபகாலமாக 'சவரக்கத்தி, மாவீரன், லியோ' போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இப்போது ' ஓல்ட் இஸ் கோல்ட்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் மிஷ்கின். இப்படத்தை 'ரைட்டர்' படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குனர் கோகுல் என்பவர் இயக்குகிறார். ‛நந்தலாலா' படத்திற்கு அப்புறம் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Read Entire Article