மீண்டும் அந்த இயக்குனருடன் இணையும் சமந்தா ?

9 hours ago 2

சென்னை,

தெலுங்கு இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான நந்தினி ரெட்டி நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்படி, நந்தினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்துரெட்டி. இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும் " என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "உங்களுடன் மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்' என்று பதிலளித்தார். நந்தினி ரெட்டியின் இந்த பதிவு சமந்தாவுடன் மீண்டும் இணைவது தொடர்பான எதிர்பார்ப்புகளை எழுப்பி இருக்கிறது.

இதனையடுத்து, சமந்தாவின் அடுத்த படத்தை பற்றி அறிய அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நந்தினி ரெட்டியும் சமந்தாவும் இதற்கு முன்பு 'ஓ பேபி' படத்தில் இணைந்திருந்தனர். 

Read Entire Article