சென்னை: கள்ளக் குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நாடு முழுவதிலிருந்தும் திருநங்கைகள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் இணைந்து மிஸ்கூவாகம்-2025 அழகி போட்டி நேற்று காலை 3 சுற்றுகளாக நடத்தப்பட்டது. காலையில் நடைபெற்ற முதல் சுற்றில் 25 திருநங்கைகள் பங்கேற்றனர். அதில் நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 திருநங்கைகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நேற்றிரவு நகராட்சி திடலில் நடைபெற்ற இறுதி சுற்றுக்குள் 7 பேர் நுழைந்தனர். தொடர்ந்து இறுதி சுற்றில் பங்கேற்ற திருநங்கைகளிடம் கல்வி, பாலினம், சமூக விழிப்புணர்வு ெதாடர்பான கேள்விகளை நடுவர்கள் எழுப்பினர். தொடர்ந்து இறுதி சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நெல்லை ரேணுகா மிஸ்கூவாகம்-2025 அழகி பட்டத்தை வென்றார். 2வது இடத்தை கள்ளக்குறிச்சி அஞ்சனா, 3வது இடத்தை கோவை ஆஷ்மிகா ஆகியோர் பிடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூட்டி ரொக்கப்பரிசு வழங்கினர்.
The post மிஸ் கூவாகமாக ரேணுகா தேர்வு: கள்ளக்குறிச்சி அஞ்சனாவுக்கு 2ம் இடம் appeared first on Dinakaran.