பிளஸ்2 தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

2 hours ago 3

ஜெயங்கொண்டம் மே 13: பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதித்த உடையார்பாளையம் அரசு பள்ளி மாணவியை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவி சுப்புலெட்சுமி 600க்கு 588 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்தார். இந்நிலையில், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவரும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவருமான மலர்விழி ரஞ்சித்குமார் மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார். மேலும், தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் உதவி தொகை பெற்று, உயர்கல்விபயின்று ஊருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கூறினார்.

பள்ளி நல்ல தேர்ச்சி சதவீதம் பெறவும் மாணவிகள் சிறந்த மதிப்பெண் எடுக்க பாடுபட்ட தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி, உதவி தலைமையாசிரியர் இங்கர்சால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் மற்றும் கல்வி போதித்த ஆசிரியர்களையும் பாராட்டினார். மேலும், முடிகொண்டானில் வரலாறு மீட்புக்குழு சார்பில் பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம் விருதுபெற்றதை பாராட்டியும் சிறப்பு செய்தார். அப்போது, கணித ஆசிரியர் தமிழரசி, நகரப்பொறுப்பாளர் ரஞ்சித்குமார், மாணவியின் பெற்றோர், இளநிலை உதவியாளர் அனுஷியா உடன் இருந்தனர்.

The post பிளஸ்2 தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article