மிருகண்டா அணையில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கலசபாக்கம் பகுதியில் தொடர் மழையால்

3 months ago 18

 

கலசபாக்கம்,அக்.7: கலசபாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக மிருகண்டா அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் முழு கொள்ளளவு எட்டியதால் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மிருகண்டா நதியின் கரையோரத்தில் உள்ள காந்த பாளையம், நல்லான் பிள்ளை பெற்றான், கெங்கல மகாதேவி, சிறுவள்ளூர், வில்வாரணி, எலத்தூர் ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை நீடித்தால் மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் கேட்ட வரம் பாளையம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிருகண்டா நதி செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரிகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தினார்.
மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மிருகண்டா அணையில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கலசபாக்கம் பகுதியில் தொடர் மழையால் appeared first on Dinakaran.

Read Entire Article